×

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தளவாய்புரம் சந்தனமாரியம்மன் கோயிலில் சுற்றுச்சுவர், வழிபாட்டு அரங்கு திறப்பு

தூத்துக்குடி, பிப். 27: தூத்துக்குடி அருகே தளவாய்புரம் சந்தனமாரியம்மன் கோயிலில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர், வழிபாட்டு அரங்க திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி, தளவாய்புரம் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இதன்  சுற்றுப்புறத்திலுள்ள ஏராளமான மக்கள்  வழிபடுகிற இந்த ஆலயத்தில் சுற்றுச்சுவர் இல்லாததும் மற்றும் வழிபாடு நடைபெறும் இடத்தில் மேற்கூரையுடன் கூடிய அரங்கு உள்ளிட்ட திருப்பணிகளை செய்து தர தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக  இந்த ஆலயத்திற்கு சுற்றுச்சுவரும் மற்றும் மேற்கூரையுடன் கூடிய வழிபாட்டு அரங்கமும் ஸ்டெர்லைட் ஆலையால் அமைத்து தரப்பட்டது. மேலும் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்ஆலையை மீண்டும் திறக்க அம்மனை வேண்டி, கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ஏராளமான கிராம மக்களோடு சேர்ந்து, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன அதிகாரிகளும், பணியாளர்களும் பங்கேற்றனர். பூஜையைத் தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கரப்பேரி சமுதாய தலைவர் பொன்ராஜ் மற்றும் முன்னாள் சமூகத் தலைவரான அதிசய ராஜ் மற்றும் சந்தனராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் பொது மேலாளர் குமரவேந்தன், மருத்துவ அதிகாரி டாக்டர் கைலாசம், பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன், பாலநாராயணன், முருகராஜ் மற்றும் ஜெயபால் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் , பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : Sterlite ,Santana Mariamman temple ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...