×

ஐன்ஸ்டீன் கல்லூரியில் கருத்தரங்கு

நெல்லை, பிப். 27:  சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் அனைத்து துறை மாணவர் சங்கங்கள் சார்பில் ஐன்ஸ்டீனியம்-2019 என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. நிர்வாக அறங்காவலர் அமுதவாணன், கல்லூரி செயலாளர் எழில்வாணன் முன்னிலை வகித்தனர். மாணவர் ஜான்வெஸ்லி வரவேற்றார். நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் பேசுகையில், மாணவர்கள் படிக்கும்போதே இதுபோன்ற பல கருத்தரங்குகளில் பங்குபெற்று தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.

கல்லூரி செயலாளர் எழில்வாணன் பேசுகையில், இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை பெற இக்கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
பின்னர் அனைத்து துறை மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி ஜகனா பாத்திமா நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Seminar ,Einstein College ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...