×

சாரண இயக்கத் தந்தை பேடன் பவுல் பிறந்த நாள் விழா

காளையார்கோவில், பிப். 27: காளையார்கோவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சாரண இயக்கத் தந்தை பேடன் பவுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டவர்களை சாரண ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் சம்பத் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாத்யூ, பாண்டுரெங்கன் ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கிய போது சாரண மாணவர்கள் மூலம் நாட்டுப் பற்றையும் சேவை மனப்பான்மையையும் சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.விழாவில் சாரண மாணவர் பிரதீப் நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாட்டை ஆசிரியர்கள், சாரண மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags : Baden Paul ,birthday party ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா