×

போலீசில் பாதிக்கப்பட்டோர் புகார் அதிக வட்டி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி அல்வா தந்த திருநெல்வேலி ஆசாமி

மதுரை, பிப்.27:  அதிக வட்டி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதிநிறுவனம் மீது போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கோ.புதூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் உத்தமன்(61). இவர் மதுரை விஸ்நாதபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், ‘‘பெத்தானியாபுரம் சாமிக்கண்ணுத்தெருவில் தனியார் நிதிநிறுவனம் இயங்கி வந்தது. இதனை திருநெல்வேலியை சேர்ந்த ராமசுதர்சன், இவரது மனைவி பிரேமலதா,கவிதா ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் வட்டி தருவதாக ஆசைவார்த்தை தந்தனர். இதை நம்பி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தேன்.

மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 63 மாதங்கள் கட்டினால் முதிர்வு காலத்தில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக அப்போது தெரிவித்தனர். அவர்கள் சொன்னபடி 63 மாதம் கட்டிவிட்டேன். அவர்கள் சொன்ன தேதியில் கட்டிய ரசீதுகளை எடுத்துக்கொண்டு நிதிநிறுவனத்திற்கு சென்றேன். அங்கு நிதிநிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. அங்குள்ளவர்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானது தெரிந்தது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை வாங்கித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். இதேபோல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்து மோசடி குறித்து புகார் மனுக்களை அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்து விட்டு நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர்’ என்றனர்.

Tags : victims ,Tirunelveli Asami ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...