×

கால்நடை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை, பிப்.27: திருவண்ணாமலை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கம் அடுத்த கிழ்படூர் கிராமத்தில் இலவச ஆடுகள் வழங்குவதற்காக பயணாளிகள் தேர்வு செய்தவற்கு மனுக்கள் பெறப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திலகவதி என்பவரும் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஆடு வழங்க கோரி மனு அளித்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டு மற்ற சில பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுடைய மாற்றுத்திறனாளி மனுவினை நிராகரிக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குநர் அலுவலகம் முன் இரவு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்தையில் மறியலை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று இணை இயக்குநர் அலுவலகத்தில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை கண்டித்தும் 20க்கும் மேற்பட்டவர்கள் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Office ,Veterinary Director ,waiter strike ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்