×

நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தந்தை புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு

நாட்றம்பள்ளி, பிப்.27: நாட்றம்பள்ளியில் தனது மகள்களிடம் தவறாக நடக்கும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேரூராட்சி தாயப்பகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் அனுராதா(34) கூலிதொழிலாளி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேஷ் பெயின்டர், இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண், 1 ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், மூத்த மகள் 9ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தனது கணவர் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு வந்து மகள்களை செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றும் முருகேஷ் வழக்கம் போல் மது அருந்துவிட்டு தனது மகள்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அனுராதா நாட்றம்பள்ளி போலீசில் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது குழந்தைகளுடன் புகார் அளிக்க வந்தார். ஆனால், போலீசார் புகாரை வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : town ,daughters ,Natrampalli ,
× RELATED சம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது