×

திருவெறும்பூர் மலைக்கோயில் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


திருவெறும்பூர், பிப்.26:  திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர்,  கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை என பன்னிரு திருமுறை வார வழிபாட்டு மன்றத்தின் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில்  குடிகொண்டிருக்கும்  நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரரை  தரிசிக்க நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்த்தர்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமலும், இயற்கை உபாதைக்கு ஒதுங்க கழிவறை வசதி இல்லாமலும் அவதிப்படுகின்றனர். இதனால் சிலர் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர்.  எறும்பீஸ்வரர் கோவிலை சுற்றி சுகாதார சீர்கேடும் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க நிரந்தரமாக கழிவறை கட்டி தர வேண்டும். மேலும் இரவு நேரத்தில் அந்த பகுதியில் உள்ள அலங்கார விளக்குகள் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் கோவிலுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர்.  இந்நிலையில்  வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா மலைக்கோவில் எறும் பீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  மகாசிவராத்திரியன்று சுமார் 25 ஆயிரம் பேர் எறும்பீஸ்வரரையும், நறுங்குழல் நாயகியையும் தரிசிக்க வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்து தருவதோடு தற்காலிகமாக நகரும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் மேலும் பழுதடைந்துள்ள அலங்கார மின்சார விளக்குகள் சீர் செய்து பொதுமக்கள் இரவு நேரத்தில் வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டுமென பொதுமக்களும் எறும்பீஸ்வரர் கோயில் பன்னிரு திருமுறை வார வழிபாட்டு மன்றத்தினரும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.  எனவே அதிகாரிகள் மலைகோவில் எறும்பீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : devotees ,mountain temple ,facilities ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...