×

மக்கள் அவதி சுற்றி திரியும் தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் அவதி

அறந்தாங்கி, பிப்.26: அறந்தாங்கியில் சாலைகளில் கேட்பாரற்று சுற்றித் திரியும் நாய்கள் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிப்பதால் பெரிதும் அவதிக் குள்ளாகின்றனர். அறந்தாங்கி நகரம் 27வார்டுகளை கொண்டது. மேலும் நகரை ஒட்டினாற் போல மூக்குடி, ஊர்வணி, ஆளப்பிறந்தான், ரெத்தினகோட்டை, ராஜேந்திரபுரம் ஊரா ட்சிகள் உள்ளன. வளர்ந்து வரும் நகரங்களில் முக்கிய நகராக அறந்தாங்கி விளங்கி வருகிறது. இந்நகரை சுற்றிலும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நகரின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி நகரில் முக்கிய சாலைகளான பட்டுக்கோட்டை சாலை, பேராவூரணிசாலை, காரைக்குடிசாலை, புதுக்கோட்டை சாலை, ஆவுடையார் கோவில் சாலை, கட்டுமாவடி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், அக்ரஹாரம், மூக்குடி ரோடு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், நுாற்றுக் கணக்கான நாய்கள் கூட்டம் கூட்டமாக கேட்பாரற்று சுற்றித் திரிகின்றன.  பகல், இரவு பாராது நாய்கள் சுற்றி திரிவதால், வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்புவோர் நாய்களிடம் மாட்டி கொண்டு கடிபடும் நிலை உள்ளது. மேலும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது நாய்கள் திடீ ரென்று குறுக்கே வருவதால், தினசரி ஏராளமானவர்கள் விபத்தில் சிக்கும் அவல நிலையும் உள்ளது.     கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறந்தாங்கி நகராட்சி சார்பில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், நாய்கள் பெருக்கம் ஓரளவு குறைந்த போதிலும், கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:    அறந்தாங்கி நகரில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர;வாகம் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்தது.இருப்பினும் நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பல்வேறு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவ தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.    

Tags : crowd ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...