×

பொன்னமராவதி பகுதியில் வறட்சியிலும் பூத்து குலுங்கும் கேந்தி பூக்கள்

பொன்னமராவதி,பிப்,26: பொன்னமராவதி அருகே கடும் வறட்சியிலும் கஷ்ட்டப்பட்டு வளர்த்து பூத்துக்குலுங்கும் கேந்திப்பூ (மஞ்சள் செவ்வந்தி) போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.     
பொன்னமராவதி பகுதியில் கடும் வறட்சி நிலவுகின்றது. இந்நிலையில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து கேந்திப்பூ என்ற மஞ்சள் செவ்வந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். இவை நல்லமுறையில் பூத்துக்குலுங்கின்றது. ஆனால் அவைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் கண்டியாநத்தம் சிண்டுமணி கோடங்கி கூறியதாவது: கடன் வாங்கி போர்போட்டு தண்ணீர் எடுத்து இரவு பகல் கண் விழித்து தண்ணீர் பாய்ச்சி இந்த கேந்திப்பூ வளர்த்தோம் நன்றாக பூத்துள்ளது. ஆனால் விலையில்லை. ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட வாங்கமாட்டீராங்க, மூடை, மூடையாக பூவை பிடிங்கி கடைக்கு கொண்டு போனால் வேண்டாம் என கூறுகின்றார்கள். அப்படியிருந்த பூக்கடையில் போட்டுவிட்டு வருகின்றோம் அதற்கு அவர்கள் பார்த்து ஏதாவது

கொடுத்தால் தான். அந்த அளவிற்கு இந்த பூவிற்கு விலையில்லாமல் போயிவிட்டது. பூ எடுக்கும் கூலி ஆட்களுக்கு கொடுக்க ஆகும் செலவிற்கு கூட இந்த பூ விலை போகவில்லை. இதற்கு அரசு உரிய விலைகிடைக்கவும், பூசாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு  அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து எங்களை போன்ற விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார். ஒரு சில நேரங்களில் கடும் கிராக்கி இருக்கும் ஆனால் இப்போது இந்த பூவை வாங்கவே ஆள்இல்லாநிலை ஏற்பட்டுள்ளது.   

Tags : Kondi ,drought ,area ,Ponnamaravathi ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...