×

அரியலூர் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிதாக அமையும் குப்பை கிடங்கு பொதுமக்கள் அச்சம்

அரியலுர்,பிப்.26: அரியலூர் பேரூந்து நிலையம் அருகே அமைந்துள்ளது காவலர் குடியிருப்பு. இக்குடியிருப்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையமும் உள்ளது. இப்பகுதியில் அமைய உள்ள குப்பை கிடங்கு மிக அருகில் வாரச்சந்தை நடக்கும் பகுதியாகும். இச்சந்தையில் 500க்கும் மேற்ப்பட்ட காய்கறி கடைகள் மளிகை கடைகள் உள்ளன. இச்சந்தைக்கு சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காய் மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தைக்கு வருவார்கள். இக்குப்பை கிடங்கு இங்கு அமைவதால் துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் வரக்கூடும் என பொது மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் காவல் நிலைய குடியிருப்பு பகுதியின் மிக அருகில் உள்ளது. இக்குடியிருப்பில் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வரும் நிலையில் ஏற்கனவே இப்பகுதி கருவை காடாகவும், சந்தை அமைந்துள்ளதால் அழுகிபோன காய்கறிகளினால் துர்நாற்றம் வீசுகின்றன. இதனால் காவலர் குடியிருப்பு பகுதிகளில் வெளிப்புறபகுதிகளில் ஜன்னல்களை திறப்பதே கிடையாது. மேலும் காற்றோட்டம் இல்லாமல் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். தற்போது மேலும் நிரந்தர துன்பத்தை ஏற்ப்படுத்துவதற்காக  குப்பை கிடங்கை அமைப்பது என்பது  குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு இப்போதே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக
கூறிகின்றனர். மேலும் இதுபோன்ற குப்பை கிடங்குகளை ஊருக்கு அருகில் அமைக்காமல் ஊருக்கு வெளிபுற பகுதிகளில் குப்பை கிடங்கை அமைத்தால் ஊருக்கும் நல்லது யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்ப்படாது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் சந்தை பகுதி மற்றும் காவல் குடியிருப்பு பகுதிகளில் குப்பை கிடங்கு அமைப்பதை ஆய்வு செய்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்து காவலர்கள் குடியிருப்பு பகுதி மக்களுக்கும், வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும் என்று பொதுமக்களின் கருத்து.

Tags : garbage warehouse ,Ariyalur ,public ,police resort ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...