×

மஞ்சினி கிராமத்தில் முலாம்பழம் விளைச்சல் ஜோர்

ஆத்தூர், பிப்.26: ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பொய்த்து போய், விவசாயிகள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு, சில விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டுள்ளனர். தற்போது முலாம்பழங்கள் நன்கு விளைந்து, அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் மரவள்ளி கிழங்கு, மஞ்சள், கரும்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 10ஆண்டுகளாக மழை முற்றிலும் இல்லாத நிலையில், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இருக்கின்ற தண்ணீரை கொண்டு விவசாய நிலங்களில், முலாம் பழம் சாகுபடி செய்துள்ளோம். இந்த பயிருக்கு குறைவான தண்ணீரை கொண்டு அதிக மகசூல் எடுக்கும் வகையில், பாலிதீன் கவர்களை கொண்டு செடிகளை மூடி வைத்துள்ளோம். அதன் மூலம் தண்ணீர் வீணாகாமல் பாதுகாக்கும் வகையில் பயிர் செய்துள்ளோம். தற்போது கோடை தொடங்கியுள்ள நிலையில், முலாம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆத்தூர், தலைவாசல் பகுதியில் சந்தை நன்றாக இருந்தால், முலாம் பழத்திற்கு நல்ல விலை கிடைக்கும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்

Tags : village ,
× RELATED இளந்திரைகொண்டான் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி