×

மேட்டூர் ேபாலீஸ் ஸ்டேஷனில் சிதிலமடைந்து வரும் பறிமுதல் வாகனங்கள்

மேட்டூர், பிப்.26: மேட்டூர், ஓமலூர் காவல் உட்கோட்டங்களில் வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் யாருக்கும் பயன்படாமல் அழிந்து வருகிறது. மேட்டூர் மற்றும் ஓமலூர் காவல் உட்கோட்டங்களில் கொளத்தூர், மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தொளசம்பட்டி, தாரமங்கலம், ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி என 10 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் விபத்துக்களில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும், மது கடத்திய பஸ்கள், லாரிகள் மற்றும் குற்ற செயல்களுக்கு பயன்படுத்திய ஏராளமான வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்கப்படாமல் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெயில் மற்றும் மழையில் நனைந்தும், காய்ந்தும் துருப்பிடித்து சேதம் அடைந்து வருகிறது. இந்த வழக்குகளை போலீசார் விரைந்து முடிக்காத காரணத்தால், வாகனங்கள் தேங்கி வருகின்றன. சில வாகனங்கள் வழக்கு முடிந்தும், உரிமையாளர்கள் எடுத்து செல்ல அக்கறை காட்டுவதில்லை. அபராதத் தொகையை விட வாகனத்தின் மதிப்பு குறைவாக இருந்தால், வாகனத்தை எடுக்க எவரும் வருவதில்லை. பல லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறித்த காலத்தில் வழக்கை முடித்து, வாகன உரிமையாளர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நல்ல நிலையில் இருக்கும்போதே காவல்துறை மூலம் ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : station ,Mettur Temples ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...