×

செல்வம் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

நாமக்கல், பிப்.26: நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பாக “வங்கிகளின் இன்றைய நிலை” என்னும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர். செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவீத்ராநந்தினி பாபு, நிர்வாக இயக்குநர் முனைவர் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜவேல் வரவேற்றார். புலமுதன்மையர் எழிராசு மற்றும் வணிக கணினி அறிவியல் துறைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இக்கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் பத்மநாதன் கலந்துகொண்டு “இந்திய வங்கித் துறையின் மூலமாக இந்திய பொருளாதார முன்னேற்றம்” என்ற தலைப்பிலும், கேரளா மாநிலத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்தகோபால் “இந்திய வங்கித் துறையின் தவறான அணுகுமுறையும் அதற்கான காரணம் மற்றும் தீர்வு” என்ற தலைப்பிலும் ஆய்வுரையாற்றினர். இந்த கருத்தரங்கில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சுவர்ஒளிப்படம் மற்றும் வாய்மொழி வழியாக ஒப்படைத்தனர். இதில் 20 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு யூ.ஜி.சி அனுமதி நாளிதல்களில் வெளியிட பரிந்துரைக்கப்பட்டது.முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் குணசேகரன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கு ஏற்பாடுகளை ஓருங்கினைப்பாளர் குருசாமி, வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.

Tags : National Seminar ,Selvam College ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்