×

பரசலூரில் நாளை மருத்துவ முகாம்

செம்பனார்கோவில், பிப்.26: ஆக்கூர் வட்டார மருத்து அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பரசலூர் சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரங்கம்பாடி வட்ட அளவிலான பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (27ம் தேதி) நடத்தப்படுகிறது. இதில் ரத்த பரிசோதனை, தோல் பரிசோதனை, கர்ப்பிணி பரிசோதனை, கண் பரிசோதனை, எலும்பு முறிவு, சித்தா, ஆயர்வேதிக் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.அதனால் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சி மற்றும் ஒரு பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Tomorrow's Medical Camp ,
× RELATED குத்தாலம் அருகே மருத்தூரில் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா