×

நாகை காடம்பாடி பூங்கா நகரில் மக்களை அச்சுறுத்தும் மின்கம்பம் விரைவில் மாற்றப்படுமா?

நாகை, பிப். 26:  நாகை காடம்பாடி பூங்கா நகரில் மக்களை அச்சுறுத்தி வரும் மின்கம்பங்களை விரைவில் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை  காடம்பாடி பூங்கா நகர் மெயின் ரோட்டில் குறைந்த மீன் அழுத்த, உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் மின் பாதைகள் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து நான்கு பக்ககுமும் மின் பாதை உள்ளது. அதன் அருகே மற்றொரு மின் கம்பமும் புதிதாக அமைக்கப்பட்டு அதில் உயர் மின் கம்பி ஒரு பக்கம் மட்டும் செல்கிறது.  இந்த மின் கம்பத்தின்  சிமெண்டு  காரைகள் பெயர்ந்து கம்பிகள் துருபிடித்த நிலையில் காணப்படுகிறது.     

இந்த மின்கம்பம் பழுதானதால் அதில் உள்ள தெரு விளக்கை ஏரி சரிபார்க்க மின் ஊழியர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் தெரு விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. மேலும் அந்த பகுதி மக்கள் மின் கம்பம் ஆபத்தான நிலை உள்ளதால் மின்கம்பத்தின் அடிப்பகுதியை சுற்றி  முள் மரத்தை வெட்டி போட்டு வைத்துள்ளனர்.  தற்போது மின் கம்பத்தின் மேல் நான்கு பக்கமும் மின் கம்பிகள் செல்வதால்  மின்கம்பம் கீழே விழாமல் தாங்கி பிடித்து வருகிறது. உடன் அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம் அமைத்திட வேண்டும் என்று அப் பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : city ,park ,Nagapattinam Kandambadi ,
× RELATED சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க...