×

கரூர் மாவட்டத்தில் துணை வாக்கு சாவடி மையங்கள் அமைப்பு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கரூர், பிப். 26: கரூர் மாவட்டத்தில் துணை வாக்கு சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
 வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கரூர்  கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தேவை ஏற்படும் இடங்களில் வாக்கு சாவடி மையங்களை மாற்றியமைத்தல், பெயர்திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,031 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் 1400க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குசாவடி மையங்களை பிரித்து துணை வாக்கு சாவடி மையம் ஏற்படுத்துவது, பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள மையத்தை இடமாற்றம் செய்வது, மையத்தின் பெயர் திருத்தம் குறித்து பேசப்பட்டது.

இதன்படி அரவக்குறிச்சி, கரூர் தொகுதியில் தலா 3 மையங்கள் பிரிக்கப்பட்டு 6 துணை வாக்குசாவடி மையம், வாக்குசாவடி அமைவிடத்தை மாற்றும் வகையில் கரூர் தொகுதியில் 1, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 11, குளித்தலை தொகுதியில் 2 என 14 மைய அமைவிடங்களை இட மாற்றம் செய்வது என முடிவு செய்யபபட்டது. இதுதொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களது கருத்துக்களும் கேட்கப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, ஆர்டிஓக்கள் சரவணமூர்த்தி, லியாகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Consultant meeting ,Vice Chancellor Center Collector ,Karur district ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...