×

கரூர்- கோவை சாலையில் நவீன கட்டுமான பொருட்கள் அடங்கிய சேகர் அண்ட் கோ ஷோரூம் திறப்பு விழா

கரூர், பிப். 26: கரூர் கோவை சாலையில் நவீன கட்டுமானப் பொருட்கள் அடங்கிய சேகர் அண்ட் கோ ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.
ஏசியன் பெயிண்ட் நிறுவனத்துடன் சேகர் அண்ட் கோ நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி கரூர் கோவை சாலையில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அனைத்து வர்த்தக சங்க தலைவர் ராஜூ, தொழிலதிபர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசி பில்டர்ஸ் செல்ல முத்து தலைமை வகித்தார். ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன சிஇஒ அமித் சிங்கால் கலந்து கொண்டு ஷோரூம் கட்டிடத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து தரைத்தளத்தில் உள்ள பிரிவுகளை குமாரசாமி பொறியியல் கல்லூரி தலைவர் குமாரசாமி, சேரன் பள்ளி தாளாளர் கருப்பண்ணன், விஎன்சி குரூப் விஎன்சி பாஸ்கர், அம்பாள் டெக்ஸ் அங்கமுத்து, கரூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவர் பாஸ்கர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

பெயிண்ட் பிரிவுகளை விகேஏ கருப்பண்ணன், சாந்த் எக்ஸ்போர்ட்ஸ் பாபு, சுபாஷினி பிளமெண்ட்ஸ் தங்கராஜ், ரவிக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இன்ஸ்பிரேஷன் லோன் பிரிவுகளை பிரேம் டெக்ஸ் வீரப்பன், ராமசாமி, முஹமது அபுல் ஹஸன் ஹாதலி தாவூதி, சுப்ரமணியம், சுந்தரமூர்த்தி ஆகியோரும், முதல் தளத்தை சிவாமி, நல்லுசாமி, சிவக்குமார், வைரம் கருணாநிதி உட்பட பலரும் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மேலும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன சிஇஒ அமித் சிங்கால் பேசுகையில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் துவக்கப்பட்ட ஐந்தாவது ஷோரூம் இது. வீடு கட்டுவதற்கான அனைத்து பொருட்களும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த ஷோரூம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேகர் அண்ட் கோ நிறுவனத்தினர் சந்திரசேகரன், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : opening ceremony ,Sekar and Go Showroom ,Karur-Coimbatore Road ,
× RELATED அருப்புக்கோட்டையில் ஆர்எம்ஜெ மஹால் திறப்பு விழா