×

வளர் இளம்பெண்களுக்கு இலவச நாப்கின் திருத்தங்கல்லில் பரபரப்பு

பொதுசுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் பெண்களுக்கான நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி வளரிளம் பெண்களுக்கு நாப்கின் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறப்புறுப்பு தொடர்பான நோய்களில் இருந்து தடுக்கவும், மலட்டுத்தன்மை வராமலிருக்கவும் இந்த நலத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இரண்டு மாதத்திற்கு 3 பேக் (ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்) வழங்கப்படும். மேலும் ரத்தஅளவு, உயரம், எடை உள்ளிட்டவை சரிபார்க்கப்படுகிறது.

நிபந்தனைகள்: 10 முதல் 19 வயதிற்குள் உள்ள பூப்பெய்த பெண்களுக்கு மட்டும். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் அட்டையினை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். தொடர்பு முகவரி: கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், தலைமையாசிரியர், வகுப்பாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஆகியோரை அணுகலாம்.

Tags : Young Adults ,
× RELATED இளம் வயதினர் மத்தியில் கொரோனா...