×

நிலா நகருக்கு தெருவிளக்கு தேவை குடியிருப்புவாசிகள் மனு

விருதுநகர், பிப். 26: விருதுநகர் அருகே, கூரைக்குண்டு ஊராட்சி நிலா நகர் மக்கள் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள நிலா நகரில் 20 குடியிருப்புகள் உள்ளன. இங்கு போதிய தெரு விளக்கு வசதியில்லை. இதனால், குடியிருப்புவாசிகள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. குடிநீர் வசதி இல்லாததால் குடம் ரூ.12 விலை கொடுத்துவாங்கி பயன்படுத்துகிறோம். நிலா நகருக்கு எளிதாக வந்து செல்லும் வகையில், கவுசிகா ஆற்றங்கரையில் சாலை அமைக்க வேண்டும். நகருக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Residents ,City ,Nana ,street vendor ,
× RELATED தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்