×

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா அதிமுக,அமமுக கொண்டாட்டம்

ஆண்டிபட்டி, பிப்.26:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆண்டிபட்டியில் நடைபெற்றது. ஆண்டிபட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் லோகிராசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் முத்து வெங்கடராமன் முன்னிலை வகித்தார். வைகை அணை சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கும், எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மற்றும் க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி, ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.

ஆண்டிபட்டியில் அமமுக அவைத் தலைவர் பீமராஜ் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் எம்.பி.பழனி, ஒன்றிய இணைச் செயலாளர் தவச் செல்வம், பேரூர் கழக செயலாளர் பொன் முருகன் ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினர். வைகைசாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.

Tags : Jayalalithaa ,birthday party ,celebration ,AIADMK ,Ammukh ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!