×

முதலிடம் பிடித்த தேனி கோகோ அணிக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்

பெரியகுளம்,பிப்.26:  பெரியகுளம் அருகே தனியார் பள்ளியில் தமிழக அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழக அளவிலான சிறந்த மகளிர் அணிகள் பங்கு பெற்று விளையாடின. இறுதி போட்டியில் தேனி மாவட்ட மகளிர் அணி முதலிடத்தினையும், இரண்டாவது இடத்தை சென்னை அணியும், 3வது இடத்தை மதுரை அணியும், 4வது இடத்தை கோவை அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் பரிசுக்கோப்பையினை வழங்கினார். உடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், செல்லமுத்து, ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : minister ,team ,Coca-Cola ,
× RELATED கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின்...