×

காரைக்குடி சிக்ரியின் முதல் பெண் இயக்குநர் பதவியேற்பு

காரைக்குடி, பிப்.26: காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் முதல் பெண் இயக்குநராக கலைச்செல்வி பதவியேற்றுக்கொண்டார்
காரைக்குடி சிக்ரியின் இயக்குநராக இருந்த விஜயமோகன் கே பிள்ளையின் பதவி காலம் கடந்த அக்டோர் மாதத்துடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகரன் சிக்ரி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் இங்கு விஞ்ஞானியாக பணியாற்றி வந்த கலைச்செல்வி முதல் பெண் இயக்குநராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் கடந்த 1967ல் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவர். அம்பாசமுத்திரம் மற்றும் பாளையங்கோட்டையில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார்.

திருநெல்வேலியில் இளங்கலை படிப்பும், கோவையில் முதுகலை படிப்பும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி கடந்த 1997ல் காரைக்குடி சிக்ரியில் விஞ்ஞானியாக சேர்ந்துள்ளார். இங்கு மின்வேதியியல் ஆற்றல் சார் துறையில் லித்தியம் மின்கல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 13க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலைவராக இருந்துள்ளார். 130க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் உலகளவிலான அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளது.  இவர் ஆராய்ச்சிகள் இரண்டு காப்புரிமை பெற்றுள்ளது. இவரது வழிகாட்டுதல் 8 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 22 ஆண்டுகால ஆராய்ச்சியில் பல துறைகளில் விருதுகள் பெற்றுள்ளார்.

Tags : Karaikudi Sikri ,
× RELATED மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்