×

காளையார்கோவில் பகுதி விவசாயிகளுக்கு கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்த கானொளி நிகழ்ச்சி

காளையார்கோவில், பிப். 26: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் பற்றிய காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது. காளையார்கோவிலில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் நெப்போலியன் தலைமை தாங்கி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் பற்றிய கருத்துக்களை விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். தொடர்ந்து வேளாண்மை அலுவலர் செந்தில்நாதன் கூறுகையில், வேளாண்மைத்துறையில் செயல்படுத்திவரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை அலுவலர் உதவித் தோட்டக்கலை அலுவலர் காளிமுத்து தோட்டக்கலைத் துறையில் செயல்பட்டுவரும் சொட்டு நீர்பாசனம் மூலமாக மா அடர்வு நடவு முறை மற்றும் காய்கறி பயிர்களில் தொழில்நுட்பம் குறித்து விரிவாக கூறினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு காணொளி முலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், ஜெயசுதா, சரவணகுமாரி, சௌமியா மற்றும் விரிவாக்க திட்டப் பணியாளர் கோகிலா, தோட்டக்கலைத் துறை அலுவலர்களான முருகேசன் மற்றும் அசோக்குமார், வருவாய்த் துறை அலுவலர்களும், காளையார்கோவில் வட்டாரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டார்கள்.

Tags : Khaliyarko ,Kisan Samman ,
× RELATED தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள்...