×

அரசு பள்ளி மாணவர்கள் தனுஷ்கோடிக்கு கல்வி சுற்றுலா நினைவு சின்னங்களை ரசித்தனர்

சாயல்குடி, பிப்.26: கடலாடி அருகே உள்ள அரசு பள்ளிகள் சார்பாக மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா நடந்தது. கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம், மூக்கையூர், கன்னிகாபுரி, சடமுனிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இணைந்து மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரியமான் பீச், அப்துல்கலாம் நினைவிடம், ராமநாதபுரம் பாலை ஐந்திணை மரபு பூங்கா உள்ளிட்ட இடங்களை மாணவர்கள் பார்த்து ரசித்தனர். கடற்கரை கலங்கரை விளக்கம் செயல்பாடு மாணவர்களுக்கு மீன்வளத்துறை அலுவலர்கள் விளக்கினர்.

பாம்பன் பாலம், ரயில் தூக்கு பாலம், தனுஷ்கோடி பழைய நினைவு சின்னங்கள், கடல் சங்கமிக்கும் முகத்துவாரம், அலை தடுப்பு, மீன் பிடி துறைமுகத்தை பார்வையிட்டனர். மேலும் மீன்பிடி தொழில் குறித்து மீனவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். பிறகு கடற்கரையில் மாணவர்களுக்கான தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நரசிங்கக் கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் கிருஸ்து ஞானவள்ளுவன், ஆசிரியர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government school students ,tours ,Dhanushkodi ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்