×

ராமநாதபுரம் அருகே திமுக கிராமசபை கூட்டம்

ராமநாதபுரம், பிப்.26: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகள், அடிப்படை பிரச்னைகளை கேட்டு வருகின்றனர். அதனடிப்படையில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் ஊராட்சி சபை கூட்டம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வாலாந்தரவை விலக்கிலிருந்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பிரவின் தலைமையில் மாவட்ட பொறுப்பாளருக்கு வரவேற்பு அளித்தனர். இதில் ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வர்த்தக அணி துணை அமைப்பாளர். பிரகாஸ், பிரித்திவ்ராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : meeting ,DMK Gram Sabha ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...