×

கவுண்டமாநதி தூர்வாரும் பணி நிதி கிடைக்காததால் முடக்கம்

திருமங்கலம், பிப்.26: திருமங்கலம் பகுதியில் காணாமல் போன கவுண்டமாநதி தூர்வாரும் பணிகள் நிதி நெருக்கடியால் பாதியில் நிற்கின்றன.
திருமங்கலத்தை அடுத்துள்ள சவுடார்பட்டியில் இருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வரையில் கவுண்டமாநதி ஆக்கிரமிப்பில் காணப்பட்டது. இதனை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் துவக்கினர். சவுடார்பட்டியிலிருந்து திருமங்கலம் திரளி வரையில் கவுண்டமாநதி தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக திரளியிலிருந்து அரசபட்டி வரையிலும், மூன்றாம்கட்டமாக அரசப்பட்டியில் இருந்து குராயூர் வரையிலும் தூர்வாரும் பணிகளை செய்து முடிக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.

முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து கரைகள் வலுவானதாக அமைந்துள்ள நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்குரிய நிதி ஒதுக்கீடு இதுவரையில் வராததால் பொதுப்பணித்துறையினர் பணிகளை முடுக்கிவிட முடியாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Downtown ,
× RELATED அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி...