கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம்

பாவூர்சத்திரம்,பிப்.26: கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் 10,11,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மாணவியருக்காக லட்சுமி ஹயக்ரீவ மகா யாகம் நடைபெற்றது. சிறந்த கல்வி, நிறைந்த ஞானம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு, தேர்வு எழுது பொருட்களை யாகத்தில் வைத்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸாம்ராஜ்யலட்சுமி நரசிம்ம பீடத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: