×

அம்பை, வாசுதேவநல்லூரில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கல்

அம்பை, பிப். 26:  அம்பையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முருகையா பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கியதற்கான சான்றிதழ் வழங்கினார். மேலும் பயிர்களை சேதப்படுத்தும் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த உதவும் மெட்டாரைசியம், இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறிகள், புளுரோட்டஸ் கிட்டுகள் மற்றும் காய்கறி விதைகளை இலவசமாக வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் ரவீந்திரன், வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் சுஜித்,  உதவி தொழில் நுட்ப மேலாளர் தங்க சரவணன்,  மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா, ஒன்றிய செயலர் செல்வராஜ், நகர செயலர்கள் ராமையா, கண்ணன்,  மாவட்ட பிரதிநிதி சுடலை,   முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி, வழக்கறிஞரணி கோமதிசங்கர், ராஜசேகர், அர்பன் வங்கி துணைத்தலைவர் பிராங்கிளின், மினி சூப்பர் மார்க்கட் தலைவர் சங்கரநாராயணன், துணைத்தலைவர் அசோக், சிங்கை அருண், மாநில பேச்சாளர் மீனாட்சி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பயனாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் இளங்கோ நன்றி கூறினார்.

சிவகிரி:   வாசுதேவநல்லூரில் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தினை மனோகரன் எம்எல்ஏ தொடங்கி வைத்து  முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கினார். சிவகிரி வட்ட வருவாய்த்துறை மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அங்குள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் ஆனந்த் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதல் தவணைத் தொகையான ரூ.2 ஆயிரத்திற்கான சான்றிதழை மனோகரன் எம்எல்ஏ வழங்கினார். வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுத் தலைவர் மூர்த்திப்பாண்டியன் திட்டம் பற்றி விவசாயிகளிடம் விளக்கிப்பேசினார். நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் சண்முகநாதன், விஏஓ பொற்செல்வி, அதிமுக நகரச்செயலாளர்கள் குமரேசன்(வாசு), கந்தராஜ்(ராயகிரி), ஒன்றிய ஜெ பேரவைச் செயலாளர் சாமிவேல், எம்எல்ஏ நேர்முக உதவியாளர் செம்புலிங்கம், சீமான் மணிகண்டன் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். வட்டார வேளாண்மை துணை அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Vasudevanallur ,AKP ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு