×

கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக்கில் கருத்தரங்கு

கடையநல்லூர்,பிப்.26:  கடையநல்லூரில் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனமும் உலக வெப்பமயமாதலும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். கடையநல்லூர் வனச்சரக வனஅலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மேலும் மாணவர்கள் விஷ பாம்புகளை எவ்வாறு கண்டறிவது, பாம்பு கடிக்கு முதலுதவி, வனவிலங்குகளை கண்டால் தாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில் அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரியின் துறை தலைவர்கள் வெங்கடாச்சலம், தங்கபிரதீப், அக்மதுஅலி, எவரெஸ்ட் நிர்வாக அதிகாரி செய்யது அலி, மேலாளர்கள் மகேஷ்வரன் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Seminar ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...