×

ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடையம்,பிப்.26:  ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் சென்ற ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழ்த்துறை பேராசிரியர் தனலெட்சுமி வரவேற்றார். வணிகவியல் துறை பேராசிரியர்  கணபதி சங்கரகிருஷ்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி செயலர் தேவராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசினை வழங்கினார். கல்லூரி முதல்வர் வெங்கடராமன் பட்டமளிப்பு விழாவினை துவக்கி வைத்தார்.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி பட்டம் வழங்கினார்.  பட்டமளிப்பு விழாவில் 125 முதுகலை மாணவ, மாணவியர் உள்பட 477 மாணவ, மாணவியர் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் ஒரு தங்கப்பதக்கம் உள்பட 15 பதக்கங்களை மாணவ, மாணவியர் பெற்றனர். தமிழ்துறையை சேர்ந்த பேராசிரியர் சீனித்தாய் மற்றும் ஆங்கிலத்துறையை சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

Tags : Graduation ceremony ,Alwararkurichi ,
× RELATED சீனாவில் இருந்து வெளியேறும்...