×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜாமீனில் வெளிவந்த ரவுடிகள் பட்டியல் கணக்கெடுப்பு மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவு

வேலூர், பிப்.26: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜாமீனில் வெளிவந்த ரவுடிகள் பட்டியலை கணக்கெடுக்க மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேசமயம் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் சமயங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, ஜாமீனில் வெளிவந்த ரவுடிகள் பட்டியல், சாராய வழக்குகளில் கைதானவர்கள் பட்டியல் சேகரித்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று டிஜிபி, மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் பழைய ரவுடிகள், ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக உள்ள ரவுடிகள் பட்டியல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : DGP ,election ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...