குளத்தூர் அருகே வேனில் கஞ்சா கடத்திய மூவர் சிறையில் அடைப்பு

குளத்தூர், பிப். 22:  குளத்தூர் அருகே  லோடு வேனில் 2 கிலோ கஞ்சா கடத்தியவாலிபர் உள்ளிட்ட 3 பேரை கைதுசெய்த போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே பட்டினமருதூர் கிழக்கு கடற்கரை சாலையில் தருவைகுளம் எஸ்ஐ தாரண்யா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லோடு வேனை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். இதில் உமி மூடைகளுக்கு இடையே 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில் இதை கடத்திக்கொண்டு வந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த டிரைவர் சாகுல் ஹமீது (45), லோடுமேன் கலந்தர் கனி (27), தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து 3 பேரையும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் வைகுண்டம் பேராவூரணி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,van kanja ,jail ,Kulathur ,
× RELATED விபத்தில் வாலிபர் பலி லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது