×

தமிழக-கேரளா எல்லையில் மாணவிகள் விடுதி திறப்பு

பாலக்காடு, பிப். 22: பாலக்காடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் நவீனமயமாக்கப்பட்ட மாணவிகள் விடுதிைய கேரளா மாநில  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் நேற்று திறந்து
வைத்தார். தமிழகம்-கேரளா எல்லையான மீனாட்சிபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இப்பகுதியில் மாணவிகள் விடுதி அமைத்து தர பெற்றோர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கைவிடுத்து வந்தனர்.  இதையடுத்து, ரூ.40 லட்சம் செலவில் மாணவிகள் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 கடந்த சில மாதங்களாக நடந்து வந்த கட்டுமான பணி தற்போது முடிவடைந்தது. இதனை கேரளா மாநில  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் நேற்று திறந்து வைத்தார் இதில், கேரள மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமை வகித்தார். ஆலத்தூர் எம்.பி., பி.கே.பிஜூ, பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வக்கீல் சாந்தகுமாரி, சித்தூர் பஞ்சாயத்து தலைவர் தன்யா, மாவட்ட கலெக்டர் பாலமுரளி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் டாக்டர்.புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags : hostel ,Kerala ,border ,
× RELATED அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை...