ஆதிவாசி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை

பந்தலூர், பிப்.22: பந்தலூர் அடுத்த கிளன்ராக் ஆதிவாசி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுதுள்ளனர். பந்தலூர் அருகே கிளன்ராக் ஆதிவாசி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் குடியிருப்புகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால் அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், கடந்த வாரம் மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது. பந்தலூரில் இருந்து சுமார் 4 கி.மீ., தூரமுள்ள கிராமத்திற்கு  வனப்பகுதியில் உள்ள மோசமான நிலையில் இருக்கும் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு தரபில் வீடு கட்டி கொடுப்பதற்கு சாலை வசதி இல்லாததால் கட்டுமானம் பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்றித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், அரசு மூலம் வீடு கட்டிதர நடவடிக்கை எடுப்பதோடு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: