×

எவ்வளவு பணம் கட்டுவது? மின் கணக்கீடு செய்யாததால் நுகர்வோர் கடும் அவதி

சிவகங்கை, பிப். 22:  சிவகங்கை நகர்ப்பகுதியில் மின் கணக்கீடு செய்யாததால் வீடு, கடை உரிமையாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியம் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும். மின் கணக்கீடு செய்வதில் கணக்கீடு செய்பவர் வீடுகள் உள்ளிட்ட மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து இடங்களுக்கும் சென்று எத்தனை யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என வீட்டில் உள்ள கணக்கீட்டு அட்டையில் பதிவு செய்வர். இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதியில் இருந்து சிவகங்கை நகர் பகுதியில் மின் கணக்கீடு செய்ய வேண்டும். ஆனால் நகரில் பெருமாள் கோயில் தெரு, 48 காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. ஒரு வாரத்திற்கும் மேலாக காத்திருந்த வீடுகள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது கணக்கீடு செய்ய ஆள் இல்லை. நீங்களே தற்போது எத்தனை யூனிட் ஓடியுள்ளது என குறித்து வந்து விடுங்கள்.

கடைசியாக பதிவு செய்யப்பட்ட மின் கணக்கீட்டுடன் தற்போதைய கணக்கீட்டை ஒப்பிட்டு பணத்தை செலுத்தலாம் என கூறியுள்ளனர். இதனால் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெரும்பாலான வீடுகளில் முதியவர்கள், பெண்கள் உள்ளதால் அவர்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும், எப்போது கட்ட வேண்டும் என தெரியாமல் உள்ளனர். இதுகுறித்து ெபாதுமக்கள் கூறியதாவது: ஆள் இல்லாததால் கணக்கீடு செய்யவில்லை என கூறுகின்றனர். மீட்டரில் எப்படி கணக்கீடு செய்வது என எங்களுக்கு தெரியவில்லை. பணம் செலுத்தாவிட்டால் அவகாசம் கூட அளிக்காமல் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். எனவே, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தாமல் உடனடியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மின்வாரிய ஊழியர் சிலர் கூறியதாவது:கணக்கீடு செய்ய நிரந்தர ஊழியர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு வேறு பணிகள் கொடுத்துள்ளனர். நிர்வாக குளறுபடியால் தான் இதுபோல் நடக்கிறது என்றனர்.

Tags : Consumers ,
× RELATED கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை...