×

திருக்கழுக்குன்றம் அருகே மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றம், பிப்.21: திருக்கழுக்குன்றம் அருகே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஈச்சங்கரணை கிராமத்தில், சுமார் 1500 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், பெரும்பாலான மாணவ - மாணவிகள் நகர்புறங்களில் படிக்கின்றனர்.ஈச்சங்கரணை கிராமத்தில், கடந்த 1955ம் ஆண்டு முதல் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 23 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். இதனால், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், அனைத்து மாணவர்களையும் உள்ளூர் பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், இடைநிலை ஆசிரியர் பாரதி, கல்விக் குழுத் தலைவர் ரூபாவதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிருந்தாவதி, கல்வியாளர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பேரணியாக வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் சென்று கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளூர் பள்ளியில் சேர்த்து எண்ணிக்கையை உயர்த்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Tags : Thirukkurukkulam ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே இலவச ஆடுகள் வழங்கும் விழா