×

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சென்னை: சென்னையில் 10 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. மத்திய பனை பொருட்கள் நிறுவனம் பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை சென்னையில் நடத்த உள்ளது. இந்த பயிற்சி, ‘‘44, குமாரப்பாபுரம், மாதவரம் மில்க் காலனி, சென்னை-51’’ என்ற முகவரியில் நடைபெற உள்ளது.  இதில் 8ம் வகுப்பு படித்த 18 வயது பூர்த்தியடைந்த இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.  பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 2 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம், முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவைகளுடன் பயிற்சி கட்டணமான 5300 KVIC,PALMGUR SCHEME A/C, CHENNAI என்ற பெயரில் டிடி எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94437 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags :
× RELATED கடந்த இரண்டரை மாதத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு