×

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறைக்கு 21.27 கோடி மதிப்பில் கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பொழுதுபோக்கு மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா வளாகத்தில் 6 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில், 20 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மெய்நிகர் காட்சியக அரங்கம், தொடுதிரை கணினி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் மாதவரம் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ணமீன் வானவில் விற்பனை வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

அதேபோன்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க துறை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள சி.டி ஸ்கேன் கருவிகள், பால்வளத்துறை சார்பில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் 1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 21 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் பல்வேறு திட்டங்களையும் திறந்து வைத்தார்.

Tags : Chief Minister ,Dairy Farm ,Fisheries Department ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...