×

23ம் தேதி கிருஷ்ணகிரி வரும் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கிருஷ்ணகிரி, பிப்.21:  கிருஷ்ணகிரிக்கு வருகிற 23ம் தேதி வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, குருபரப்பள்ளியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் வருகிற 23ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
மேற்கு மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு 23ம் தேதி பகல் 12 மணிக்கு ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குருபரப்பள்ளியில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. வரவேற்பு மேடையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கவுள்ளதால், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வரிசையாக நின்று தலைவருக்கு புத்தகங்கள், பொன்னாடைகள் அணிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மூத்த முன்னோடிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக்கழக, ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளவும். தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி, தொமுச உள்ளிட்ட தோழர்கள் சீருடையுடன் கலந்துகொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்படையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.

Tags : Mrs. ,Krishnagiri ,Welcome ,Stalin ,
× RELATED கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை...