×

வீரப்பன் கொட்டாய் பகுதியில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரி, பிப். 21:  படப்பள்ளி ஊராட்சி வீரப்பன் கொட்டாய் பகுதியில் பழுதடைந்த சாலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊராட்சியில் வீரப்பன் கொட்டாய் கிராமம் உள்ளது. ஊத்தங்கரையில் இருந்து வெங்கடதாம்பட்டி வழியாக சுமார் 6 கிலோமீட்டர்  செல்ல வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்கு தார்சாலை அமைக்கப்பட்டது. தரமாக சாலை அமைக்காததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தார்சாலையில் பல இடங்களில் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கத்திரிக்காய், மிளகாய், வெண்டகாய், பாகற்காய், புடலங்காய், தக்காளி, முருங்கைகாய், அவரைக்காய் போன்றவற்றை தினந்தோறும் விற்பனைக்காக ஊத்தங்கரை நகருக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
கிராமத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன் படுத்துகின்றனர். இச்சாலை பழுதால் உறிய நேரத்தில் காய்கறிகளை  விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும்,  அதியாவசிய தேவையான மருத்துவம், கல்வி, வெளியூர் செல்லவும் சிரம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vehicle drivers ,roads ,area ,Veerappan kottai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...