கொடைக்கானலில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருமாள்மலை அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சின்னவளையம்குளத்தை சேர்ந்த மூர்த்தி (37), மதுரை அண்ணாநகர் முந்திரிதோப்பு சிக்கந்தர்புரத்தை சேர்ந்த செந்தில் என்ற நாற்காலி செந்தில் (36) என்பது தெரிந்தது. மேலும் இவர்களை சோதனை செய்ததில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்ககாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : kanja ,Kodaikanal ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்தை...