×

தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி, பிப்.21: தூத்துக்குடியில் இன்று (21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (21ம்தேதி) நடக்கிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ம் ரயில்வே கேட், 2ம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துக்கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags : Resettlement areas ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...