×

ரோந்து பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் வாகன தணிக்கை செய்யக்கூடாது

விழுப்புரம், பிப். 20:  விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடபடக்கூடாது என்றும், ரோந்து பணி, விபத்துகளை தடுக்கும் பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் மைதானத்தில் ரோந்து வாகனங்களில் உரிய உபகரணங்கள் உள்ளதா, வாகன விளக்குகள் முறையாக எரிகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீசாரிடம் எஸ்பி ஜெயக்குமார் பேசுகையில், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாலையில் எந்தவித விபத்துகளும் நடக்காத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
பேரிகார்டுகள் சாலையில் சரியான இடைவெளியில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

விபத்து அபாய பகுதிகளை கண்டறிந்து அதனை தடுக்க அப்பகுதி காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடக்கூடாது. சாலை விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். காயமடைந்தவர் இருந்தால் ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் ரோந்து வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் இறங்கி பணியாற்றும்போது பிரதிபலிப்பு மேலாடை அணிய வேண்டும். கையில் பிரதிபலிப்பு விளக்கு வைத்திருக்க வேண்டும் என்றார். இதனிடையே நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு போதிய டீசல் வழங்கப்படவில்லை. பழுதடைந்த விளக்குகள், டயர்களை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு எஸ்பி கூறுகையில், ரோந்து வாகனங்களுக்கு 420 லிட்டர் வரை டீசல் வழங்க அளவு உள்ளது. சில சமயங்களில் கூடுதலாக தேவைப்பட்டால் என் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை