உடன்குடி, பிப். 20: குலசேகரன்பட்டினத்தில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடன்குடி அணி முதலிடம் வென்றது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் ஹசனியா நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உடன்குடியில் மாவட்ட அளவில் 32 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது.
பரிசளிப்பு விழாவிற்கு சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சிராசுதீன் தலைமை வகித்தார்.
வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, உடன்குடி நகரச் செயலாளர் ஜாண்பாஸ்கர், சிவலூர் ராஜேந்திரன், முகைதீன், கிஷார் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் பாலசிங், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை பழைய மாணவர் சங்கத் தலைவர் அபுல்காசிம், செயலாளர் அசாரூதீன், துணைச் செயலாளர் ரம்சான் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.