×

காஷ்மீரில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி வியாபாரிகள் மவுன ஊர்வலத்திற்கு நெல்லை போலீஸ் திடீர் தடை

நெல்லை, பிப். 20:  நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடக்க இருந்த மவுன ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு நெல்லை மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டவுன் ரதவீதிகளில் நேற்று மவுன ஊர்வலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஊர்வலம் செல்ல தயாராக வந்த வியாபாரிகளிடம் ரதவீதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் வாகையடி முனையில் இருந்து வஉசி தெரு, பாரதியார் தெரு ஆகிய தெருக்களில் நடத்திக் கொள்ளலாம் என அவர்களை மாற்று இடத்திற்கு அனுப்ப முயன்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வியாபாரிகள் டவுன் காந்தி சிலை முன்பு திரண்டு உயிர்நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன், மாநகர தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் கோல்டன்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் விநாயகம், டவுன் சந்திரசேகரன், ரூபி ஷேக்பரித், நயன்சிங், டவுன் மார்க்கெட் பூதத்தார் வியாபாரிகள் சங்கம் செந்தில்குமரன், ராஜாமணி, வடக்கு ரத வீதி சங்கம் சோனா சங்கர், ஹைரோடு வியாபாரிகள் சங்கம் நாதன் ஆகியோர் பேசினர்.

Tags : Police officers ,gunmen ,Kashmir ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...