×

குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் கண்டு கொள்ளாத முத்துப்பேட்டை பேரூராட்சி

முத்துப்பேட்டை, பிப்:20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு பின்புறம் உள்ள பழைய போஸ்டாபீஸ் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் வசதிக்காக பூமிக்கடியில் பேரூராட்சியின் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இதிலிருந்து இப்பகுதியை சேர்ந்த பலரும் குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவர் வீட்டின் அருகில் பூமிக்கடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும்  குடிநீர் வீண் விரயமாகி ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடுகிறது. தினமும் குடிநீர் திறந்து விடும் நேரத்தில் காலை முதல் மதியம்  மதியம் வரை வீணாகி செல்லும் குடிநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் வியாபார கடைகளை சூழ்ந்து சாக்கடைநீர் போன்று மாறிவிடுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் சீரமைத்து தரக்கோரி பலமுறை பேரூராட்சியில் புகார் தெரிவித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் காலதாமதம்  செய்யாமல்  விரயமாக செல்லும் குடிநீரை தடுத்து நிறுத்தவேண்டும் என இப்பகுதி மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattuvattu ,town ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...