×

பைங்காட்டூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, பிப். 20: திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் பைங்காட்டூர் ஊராட்சி ஒன் றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர்கள் எம்எல்ஏ ஆடலரசனை சந்தித்து பள்ளி க்கு அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மனுக்கள் அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் தெற்கு ஒன்றியத் தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் பைங்காட்டூர்,அக்கரை கோட்டகம், களப்பாள், குலமாணிக்கம், ரெங்க நாதபுரம் ஆகிய 5 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்றது. இதன் துவக்க விழா பைங்காட்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்எல்ஏ ஆடலரசன் தலைமை வகித்தார். கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ் முன்னிலை வகித்தார்.  கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பால.ஞானவேல், துணை செயலாளர் தங்க. வேல்முருகன்,  ஊராட்சி செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பேசினர். பைங்காட்டூர் கிளை செயலாளர் சோமு வரவேற்றார். இதில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் உள் பட ஏராளமான பொது மக்கள் பங்கேற்று இலவச வீட்டு மனை பட்டா, முதி யோர் தொகை இழுத்தடிப்பு, கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து  தருவதில் அதிகாரி களின் மெத்தன போக்கு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு குறைகளை கூறி அதற்கு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரினர்.மேலும் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் பைங்காட்டூர் ஊரா ட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளிக்கு தேவையான கழிவறை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை செய்து தருமாறு எம்எல்ஏ ஆடலரசனிடம் மனுக்கள் அளித்தனர்.
பொது மக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த பின் எம்எல்ஏ ஆடலரசன்  பேசுகையில் பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். முடிவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags : DMK ,Panchayat Meeting ,Bikaner ,government school ,facilities ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்