×

காவல் நிலையங்களில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமானோர் படையெடுப்பு

புதுக்கோட்டை,பிப்.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் 37சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேசன்களும், 5 மகளிர் போலீஸ் ஸ்டேசன்களும் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேசன்கள் மாவட் டத்தில் உள்ள 7சப்டிவிசன் அலுவலகங்கள் (டிஎஸ்பி அலுவலகம்) கட்டுப் பாட்டில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஸ்டேசன்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு முதல் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் என பணியாற்றி வருகின்ற னர். இதபோல் எழுத்தர், வரவேற்பாளர், முதல்நிலை காவலர்கள், ஊர்காவல் படையினர் என பணியில் இருந்து வருகின்றனர். இதே போல் மாவட்ட குற்றப் பிரிவில் டிஎஸ்பி முதல் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.  
இந்நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் சுமார் 25 முதல் 40 வருவாய் கிராமங்கள் உள்ளது. சில போலீஸ் ஸ்டேசன்களுக்கு நகராட்சிகள், பேரூராட்சி கள் வரும். இந்த பகுதியில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை, அடிதடி, திருட்டு என எந்த பிரச்னையாக இருந்தாலும் அந்ததெந்த போலீஸ் ஸ்டேசனின் பணியா ற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனைப்படி போலீசார் நடவடிக்கை மேற்கொள் வார்கள்.
கிராமங்களில் இரு தரப்புக்கும் இடையே நடக்கும் பிரச்னை ஏற்பட்டால் பாதிப் புக்குள்ளானவர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று புகார் மனு அளிப்பார்கள். அந்த புகார் மனு அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இதே போல் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்கள் பிரச்னை குறித்து விரிவாக மனுதயாரித்து போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு அளிப்பார்கள்.
இதில் ஒரு சிலர் தங்கள் வக்கீலுடன் சென்று புகார் மனு அளிப்பார்கள். யார் மீது புகார் அளித்தாலும் போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைப் பார்கள். அப்போது புகாருக்கு அழைக்கும் போது ஒரு சிலர் தங்கள் வக்கீலை அழைத்து செல்வார்கள். சிலர் அவர்களே போலீசாரிடம் ஆஜராகி தங்கள் விள க்கத்தை அளிப்பார்கள்.
அதில் எதிர் தரப்பு உடன்பாடு ஏற்பட வில்லை என்றால் உண்மை புகாரின் உண்மை தன்மையை பொருத்து போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள்.இதனால் பொதுமக்களுக்கு பிரச்னை என்ற உடன் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று புகார் மனு அளிப்பார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேசன்களில் பொதுமக்கள் அளிக்கப்படும் புகார் மனுக்கு உரிய நடவடிக்கை யை எடுக்க வில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் நடை பெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து புகார் மனு அளிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்களை பெற்று பதிவு செய்யும் அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மனுக்கள் வந்த நிலையில்  கடந்த சில மாதங்களாக  போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு கலெக் டர் அலுவலகம் வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்களை பெறும் அலுவலர்கள் கூறியதாவது:
குறைதீர் கூட்டத்திற்கு மக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களாக தயார் செய்து கொண்டு வந்து தருவார்கள்.மனுக்களை பெற்று பதிவு செய்து கொண்டு  நாங்கள் படித்து பார்த்து துறை வாரியாக ஒதுக்கீடு செய்வோம். அப்படி பார்க் கும் போது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்னைக்கு குறைதீர் கூட்டத்தில் வந்து அதிக அளவில் கொடுக்கின்றனர். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வாரமும் போலீஸ் ஸ்டேசனில் நடவடிக்கை எடுக்க வில்லை. பிரச்னைக்கு உரிய நடவடிக்கையை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக என்னை அடித்து விட்டார்கள் அதற்கு நடவடிக்கை இல்லை, என்னை மிறட்டுகிறார்கள் அதற்கு நடவடிக்கை இல்லை, இடத்தை அபகரித்துக்கொண்டு பிரச்னை செய்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை என இப்படி என்று மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு கண்டிப்பாக போலீசார் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
பொதுமக்கள் பிரச்னைக்கு போலீஸ் ஸ்டேசனுக்கு மனுக்கள் அளித்தவுடன் அதுகுறித்து சம்மந்தப்பட்ட ஸ்டேசன் போலீசார்கள் விசாரணை செய்வார்கள். விசாரனையில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டப்படடி வழக்கு பதிவு செய் வார்கள். ஸ்டேசன் எடுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். டிஎஸ்பி அலுவலகத்தில் நடவடி க்கை எடுக்க வில்லை என்றால் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம். அங்கும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ஐஜி அலுவல கத்தில் புகார் மனு அளிக்கலாம்.
இது குறித்து தெரியாதவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்கி ன்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேசன்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் புகார் அளிப்பவர்வர்கள் சொல்வது விசாரணையில் பொய் என்று தெரிந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம். அதனால் அந்த புகார் தாரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளிக்கின்றனர். இதற்கு போலீசார் என்ன செய்யமுடியும். பொதுமக்கள் அளிக்கப்படும் புகாரின் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக போலீசர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றனர்.
என்ன செய்வதென்று புரியவில்லை...
கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த மக்கள் கூறியதாவது: காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தால் முறையான விசாரனை செய்வது இல்லை. பலமுறை காவல் நிலையத்திற்கு சென்று கேட்டாலும் விசாரிப்பதற்கே காலம் தாழ்த்துகிறார்கள். சில நேரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால் ஊதாசினப்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.  வேறு வழியின்றி நாங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்திற்கு வந்து புகார் மனு அளிக்கின்றோம் என்றனர்.

Tags : police stations ,
× RELATED சென்னையில் உரிமம் பெற்ற 2,125...