×

சாலையில் ஓடும் கழிவுநீர் மாவட்டம் கெண்டை மீனா சிக்குமா? கருப்பையாபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் வேண்டும்

வருசநாடு, பிப்.20: மயிலாடும்பாறை அருகே சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்டது கருப்பையாபுரம் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான பொது சுடுகாடு உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு பிணங்களை புதைக்கும் போது மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. நாய் போன்ற விலங்குகள் பிணங்களை இழுத்துச் சென்றுவிடுகின்றன. எனவே சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக பல ஊராட்சி சபை கூட்டங்களிலும் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனாலும் சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சுடுகாட்டுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மழைக் காலங்களில் ஓடைகளில் தண்ணீர் வரும் நேரங்களில் சுடுகாட்டு பிணங்களை அடித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து கிராமவாசி பூங்கொடி கூறுகையில்,  ‘‘சுடுகாட்டு அடிப்படை வசதி சம்பந்தமாக பலமுறை நாங்கள் மனு கொடுத்துள்ளோம். செய்து கொடுப்பதாக அதிகாரிகள் சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் இதுவரை எவ்வித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கருப்பையாபுரம் விவசாயி ஈஸ்வரன் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பதற்கு ஊராட்சி நிர்வாகமும், யூனியன் நிர்வாகமும் மிகவும் தயங்கி வருகிறது. இது சம்பந்தமாக எங்கள் கிராமங்களில் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும் எவ்வித பணியும் இதுவரையும் செய்து கொடுக்கவில்லை. வரும் காலங்களில் செய்து கொடுத்தால் எங்கள் கிராம சுடுகாட்டிற்கு ஒரு விடியல் ஏற்படும்’’ என்றார்.

Tags : road ,wasteland district ,Meenakshi ,village ,Keppayapuram ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி