×

ஆலங்குடி அருகே அய்யனார் கோயில் மாசிமக திருவிழா 33அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு

ஆலங்குடி, பிப்.20: ஆலங்குடி அருகே அய்யனார் கோயில் மாசிமக திருவிழாவை யொட்டி 33அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலத்தில் புகழ்பெற்ற பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலின் முன்பு சுமார் 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலை உள்ளது.இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாவில், குதிரை சிலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசிமகத்திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவையொட்டி, பெருங்காரையடி மீண்ட அய்யனாருக்கு திரவிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

இதைத்தொடர்ந்து, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குடும்பத் தினருடன் வாகனங்களில் காகித மாலைகளை ஊர்வமாக எடுத்துவந்து குதிரை சிலைக்கு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அன்ன தானம் வழங்கப்பட்டன. இந்த திருவிழாவில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ayyonar temple Masimamaka ,festival ,garland ,Alangudi ,
× RELATED காரைக்கால் அம்மையார் கோயிலில்...